பொலிஸ் உதவி பாதுகாப்பு பிரிவு
நாம் செய்வது என்ன
பொலிஸ் பாதுகாப்பு
இது இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் குறித்த 2015 இன் 4 ஆம் இலக்க சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ள ஒரு விஷேட பிரிவாகும். இது ‘குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கும் பாதுகாப்பதற்குமான’ பிரிவு என அழைக்கப்படுகின்றது. குறித்த சட்டத்தின் 19 (2) ஆம் பிரிவின் கீழ் உத்தியோகபூர்வமான முகாமைத்துவ சபைக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கண்காணிப்பில் தொழிற்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இந்தப் பிரிவுக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிரிவு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
இந்த 'பிரிவு' தேசிய அதிகார சபையின் ஒழுங்குறுத்துகை அறிவுறுத்தல்களின் பிரகாரம் தொழிற்படுகின்றது. குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல், முறைப்பாடுகள், குற்றச்சாட்டுகள் அல்லது தகவல்கள், அவர்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் ஏற்படுத்தப்படும் சேதங்கள் முதலிய விடயங்களை விசாரித்தல், அந்த பிரிவு மூலம் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன் விசாரணையை மேற்கொள்ளச்செய்தல் முதலிய கருமங்கள் இந்தப் பிரிவின் சில கடமைப் பணிகளாகும். அத்தகைய குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்கும் பொருட்டு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் வினைத்திறன் வாய்ந்த விதத்தில் நடவடிக்கைகளை எடுக்க தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளல்.