நாம் யார்?

நாம் ஒரு அதிகார சபை

குற்றத்தால் பலியானவர்களின் தேவைகளை சபை பூர்த்தி செய்யும்.

குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளை பாதுகாத்து, ஊக்குவித்து அந்த உரிமைகளை செயற்படுத்துவோம். அமைதியான சமத்துவமான ஒரு உலக சமூகத்தை கட்டியெழுப்பும் உன்னத பணிக்கு எமது சேவையை உச்சளவில் வழங்க எதிர்பார்க்கின்றோம்..

அதிகம் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்

சம்பந்தப்படுபவர்கள் யார்?

எமது தரப்புகள்

நீங்கள் குற்றத்தால் பலியான ஒருவரா அல்லது குற்றத்திற்கு எதிராக சாட்சியளிக்கும் ஒருவரா?

குற்றத்தால் பலியாகுபவர்கள் யார்?

  • குற்றத்தால் பலியானவர் என்பது குற்றத்தின் விளைவாக உடலியல் அல்லது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள, சொத்துக்கள் சேதம் அல்லது பொருளாதார நட்டங்கள் ஏற்பட்டுள்ள நபர் ஒருவர் என பொருள்படும்
  • நீங்கள் ஒரு சிறு பிள்ளையாக அல்லது ஒரு முதியவராக இருக்கலாம்
  • நீங்கள் உளவியல், உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டவராக அல்லது பொருளாதார ரீதியில் நட்டம் அல்லது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டவராக இருக்கலாம்
  • குற்றத்தின் விளைவாக நீங்கள் உடற்காயத்திற்கு அல்லது உடல் பலவீனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒருவராயின்
  • நீங்கள் குற்றத்தால் பலியான ஒருவருக்கு உதவி செய்ததால் அல்லது ஒரு குற்றம் நிகழ்ந்ததை தடுத்ததால் பாதிப்புக்குள்ளாகிய ஒருவராயின்
  • உங்களின் குடும்ப அங்கத்தவர் ஒருவர், நண்பர் ஒருவர் அல்லது உறவினர் ஒருவர் குற்றத்திற்கு பலியாகியதால் நீங்கள் கசப்பான அனுபவத்தையுடைய ஒருவராயின்

குற்றத்திற்கு எதிராக சாட்சியமளிப்பவர் யார்?

  • நீங்கள் ஒரு குற்றத்திற்கு எதிரான முறைப்பாடு அல்லது விசாரணை அல்லது புலன்விசாரணை பற்றிய தகவல்களை வழங்கியுள்ள ஒருவராக இருக்கலாம்
  • ஒரு குற்றம் அல்லது அடிப்படை மனித உரிமைகள் மீறல் அல்லது உரித்துக்கள் மீறல் பற்றிய தகவல்களை வழங்கி நீங்கள் ஒரு விசாரணைக்கு அல்லது புலன்விசாரணைக்கு பங்களித்த ஒருவராக இருக்கலாம்
  • குற்றத்தால் பாதிக்கப்பட்டதன் விளைவாக ஒரு முறைப்பாட்டை செய்துள்ள நபர் ஒருவருக்கு உதவுவதற்காக ஒரு சத்தியப்பிரமாண உறுதிமொழியை வழங்கியுள்ள ஒருவராக இருக்கலாம்
  • நீங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல்களை அல்லது தொடர்பாடல் விபரங்களை வழங்கியுள்ள ஒருவராக இருக்கலாம்
  • மனித உரிமைகளை அல்லது அடிப்படை மனித உரிமைளை மீறுதல் அல்லது சட்டத்தை மீறுதல் சம்பந்தமான ஒரு குற்றத்தை விசாரணை செய்யும் அரச அதிகாரி ஒருவராக இருக்கலாம்
  • ஒரு நீதிமன்றத்தின் அல்லது ஒரு விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் அல்லது அரை நீதிமன்ற நடவடிக்கைகளில் சாட்சியமளிப்பதற்காக அல்லது ஒரு கூற்றை வெளிப்படுத்துவதற்காக, ஒரு ஆவணத்தை, அறிக்கையை அல்லது ஏனைய ஏதாவதொன்றை சமர்ப்பிப்பதற்காக ஒரு நீதிமன்றத்தினால் அல்லது விசாரணை ஆணைக்குழுவினால் அழைப்பாணை கிடைத்துள்ள ஒருவராக இருக்கலாம்

நீங்கள் ஒரு குற்றத்திற்கு பலியாகலாம்..

நீங்கள் ஒரு குற்றத்தின் சாட்சியாக இருக்கலாம்..

நீங்கள் மேலும் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையென கருதும் தருணத்தில், 1985 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள். நாம் உங்களை பாதுகாக்க தயாராகவுள்ளோம்.

எங்கள் தொடர்பு சங்கிலி என்றால் என்ன?

எங்களை தொடர்பு கொள்ள பாதை

1

அழையுங்கள்

நீங்கள் மேலும் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையென கருதும்
தருணத்தில், 1985 தொலைபேசி இலக்கத்தை அழையுங்கள்න

எங்களை தொடர்பு கொள்ள
2

பொலிஸ் பாதுகாப்பு பிரிவு

இயக்குநர் - போலீஸ் உதவி மற்றும் பாதுகாப்பு பிரிவு
M-0718592147 T-0112326317 F-0112326321

பிரிவு
3

அருகிலுள்ள காவல் நிலையம்

நீங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தை கண்டறிந்து தொடர்புகொள்ளுங்கள்

காவல் நிலையங்கள்

கிடைக்கும் சேவைகள் எவை?

இந்த அதிகார சபை வழங்கும் சேவைகள்

பாதிக்கப்பட்டவராக உங்களுக்கு உரிமை உண்டு

  • சமத்துவமும், நியாயமும், கௌரவமும், தனித்துவமும் மதிக்கப்படுதல்
  • விரைவான, பொருத்தமான, நியாயமான ஒரு பரிகாரத்தை பெற்றுக்கொள்ளல்
  • அச்சுருத்தல், பயமுறுத்தல், பழிவாங்கல் மற்றும் பழிவாங்கல்கள் அடங்கலாக பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படுதல்
  • உளவியல், உடலியல் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளல்
  • நடைமுறையிலிருக்கும் சட்டமுறையான பரிகாரங்கள், விசாரணைகளின் முன்னேற்றம், பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் முதலியவற்றை அறிந்துகொள்ளல்
  • ஒரு முறைப்பாட்டைப் பதிந்து விசாரணையை முன்னெடுக்கச்செய்தல்
  • நீதிமன்ற, அரை நீதிமன்ற விசாரணை விளம்பல்களின் அல்லது ஏதாவதொரு நியாயாதிக்க சபை நடத்தும் விசாரணை, விளம்பல்களின் போது சட்டரீதியான ஒரு பிரதிநிதித்துவைத்தை பெற்றுக்கொள்ளல்
  • அறிக்கைகளின் சான்றுபடுத்திய பிரதிகளை பெற்றுக்கொள்ளல் உ+ம்: அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை
  • நீதிமன்ற, அரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அல்லது எந்தவொரு நியாயாதிக்க சபை நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்கும் பொருட்டு ஏதாவது உதவியையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ளல்

உங்களுக்கு பின்வரும் உரித்துக்கள் இருக்கின்றன

  • உங்களுக்கு எதிராக புரியப்பட்டுள்ள குற்றம் மற்றும் நீங்கள் ஒரு நீதிமன்றத்திற்கு அல்லது ஒரு விசாரணை ஆணைக்குழுவுக்கு வழக்கை தாக்கல் செய்ததன் விளைவாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள செலவை கருத்திற்கொண்டு ஒரு பணத் தொகையை பெற்றுக்கொள்ளல்
  • வளங்களுள்ள நாடுகளிலிருந்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளல்
  • குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபைக்கு விண்ணப்பித்தல். தேவையான வளங்கள் இல்லாத பட்சத்தில் தேவையான மருத்துவ சிகிச்சையை பெறுவதற்காக நிதி உதவியை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தல்

சாட்சியாளர் ஒருவர் என்ற ரீதியில் உங்களுக்கு பின்வரும் உரிமைகள் இருக்கின்றன.

  • நியாயமாகவும் கௌரவமாகவும் மதிக்கப்படுதல், நீதிமன்ற, அரை நீதிமன்ற நடவடிக்கைகளில் அல்லது எந்தவொரு நியாயாதிக்க சபை நடவடிக்கைகளில் உங்களின் கௌரவம் மதிக்கப்படுதலும் தனித்துவம் உறுதிப்படுத்தப்படுதலும்
  • எந்தவொரு பாதிப்பிலிருந்தும், அச்சுருத்தல், பயமுறுத்தல், பழிவாங்கல் விளைவாக வரும் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கப்படுதல்
  • உங்களுக்கும் உங்களின் சொத்துக்களுக்கும் தேவையான பாதுகாப்பு
  • தற்காலிக தங்குமிடவசதிகள்
  • நிரந்தரமாக மீண்டும் சமூகத்தில் நிலைப்படுத்தல்
  • தற்காலிக அல்லது நிரந்த தொழில்
  • மீண்டும் இனங்காணல்
  • வேறு தேவையான பரிகாரங்கள்

மற்றும்

  • குற்ற விசாரணை நடத்தப்படும் காலகட்டத்தில் அல்லது பின்னர்
  • விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முன்னர் அல்லது பின்னர்
  • நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னர் அல்லது பின்னர்
  • முதலிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பெற்றுக்கொடுக்க முடியும்.
  • குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை
  • குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் தாபிக்கப்பட்டுள்ள பிரிவு
  • குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் தாபிக்கப்பட்டுள்ள பிரிவு, ஊழல் இலஞ்ச மோசடிகள் குற்றப் பிரிவு (CIABOC), மனித உரிமைகள் ஆணைக்குழு, விசாரணை ஆணைக்குழு அல்லது விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு
  • பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்புடைய பொலிஸ் அதிகாரிகள்
  • நீதிமன்றம் உரிய வழக்கை விளம்ப முன்னரும் வழக்கை நிறைவு செய்துள்ள பின்னரும்

ஆம், நீங்கள் குற்றத்தால் பலியான ஒருவராயின், குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையிடமிருந்து இடைக்கால நஷ்டஈடுகளை கோரலாம்.

  • ஏதாவதொரு உடல் காயம் அல்லது உளவியல் பாதிப்பு, சொத்துக்கள் இழப்பு அல்லது சொத்துக்கள் பாதிப்பு மற்றும்
  • மருத்துவ சிகிச்சை, புனர்வாழ்வு அல்லது ஆலோசனை சேவை முதலிய சேவைகளை பெற்றுக்கொள்ள தேவையான பணம்

மேலும்,
ஒவ்வொரு மேல் நீதிமன்றத்திலும் அல்லது நீதிவான் நீதிமன்றத்திலும் ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டால் - 1 மில்லியன் ரூபா

முன்னேற்றம்

எங்கள் நிகழ்ச்சிகள்

Awareness Programme for Crime and Minor Crime OICs of Western Province-Group 1

11th & 12th April 2019

Awareness Programme for Higher Officials of Department of Prison

10th December 2018

Awareness Programme for Journalists and Heads of Media Institutions in collaboration with the Ministry of Mass Media

09th January 2020

எங்கள் கூட்டுத்தொகைகள்

நாங்கள் ஒத்துழைக்கிறோம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசு

Uயு.என்.டி.பி (ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம்)

யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி) இலங்கை

Transparency International Sri Lanka