நாம் செய்வது என்ன

நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல் மற்றும் கொள்கைகளுக்கு உதவுதல்

கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் பிரிவு இந்த அதிகார சபையின் மிக முக்கியமான ஒரு பிரிவாகும். குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்குரிய 2015 இன் 4 ஆம் இலக்க சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ள குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் செயற்பணிகளை மேற்கொண்டு குறிக்கோள்களை அடைந்துகொள்ளும் முகமாக குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளையும் உரித்துக்களையும் அவர்களுக்கு அறியப்படுத்தும் பொருட்டு புதிய வேலைத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் விஷேடமாக உதவுதல்.

எமது இந்தப் பிரிவு பிரதான பிரிவுகளையும் துணைப் பிரிவுகளையும் கொண்டதாகும். அந்தப் பிரிவுகளின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.

இந்தப் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும்

குறித்த சட்டத்தின் பிரகாரம், எமது பிரிவினது பொறுப்புக்களையும் கடமைகளையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.

  • குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளையும் உரித்துக்களையும் மதிக்கச்செய்தல், அவற்றை விளம்பரப்படுத்தல்
  • குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளையும் உரித்துக்களையும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தல்
  • சமயோசித உகந்த கொள்கைகள், தேர்ந்தெடுக்கும் திருத்தங்கள், சட்டங்கள் தயாரித்தல் மற்றும் கொள்கைகள் முதலிய விடயங்களுக்கு சிபாரிசுகளை முன்வைத்தல்
  • குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளையும் உரித்துக்களையும் விளம்பரப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய நியமங்களையும், சரியான கொள்கை நடைமுறைகளையும் இந்த அதிகார சபை சரியான முறையில் பேணுகின்றதா என நிச்சயமாக அறிந்துகொள்ளும் பொருட்டு, அதிகார சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்பொழுது பேணப்படுகின்ற பல கொள்கைகளையும், சட்டங்களையும், நடைமுறைகளையும், செயல்முறைகளையும் அவதானித்தல் மற்றும் அத்தகைய அவதானிப்புகளின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான உகந்த கொள்கைகளையும், சட்டங்களையும், நடைமுறைகளையும், ஏற்றுக்கொள்ளும் வகையில், அவற்றை திருத்துவதற்கும் பிரயோகிப்பதற்கும் தேவையான சிபாரிசுகளை முன்வைத்தல்
  • வயது, பால்நிலை, மதம், மொழி, கலாசார நம்பிக்கை, வழக்காறுகள், இனம் மற்றும் சமூக நிலை அல்லது ஏதாவது வலதுகுறைவு, ஏதாவது பலவீனம் அல்லது வேறு ஏதாவது காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்படும் அல்லது பாதிக்கப்படக்கூடியது என கருதக்கூடிய குற்றத்தால் பலியானவர்ளுக்கு விஷேடமாக அவர்களின் தேவையின் அடிப்படையில் செயல்படுவதில் சம்பந்தப்படும் நன்னடத்தை சமூக சேவைகளுடன் தொடர்புடைய அரச மருத்துவ அதிகாரிகள், அரச ஊழியர்கள், சிறைச்சாலை திணைக்களத்தினதும், இலங்கை பொலிஸ் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்கள் முதலிய சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளச்செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்
  • அரச மருத்துவ அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படும் சமூக சேவை நிறுவனங்களினதும், சிறைச்சாலைகள் திணைக்களத்தினதும் ஊழியர்கள், இலங்கை பொலிஸ் திணைக்களத்திலும், சட்ட அமுலாக்கல் விடயத்தில் சம்பந்தப்படுகின்ற நியதிச்சட்ட சபைகளிலும் பணியாற்றுகின்ற ஊழியர்கள், அரச ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஆணைக்குழுக்கள் அல்லது ஏதாவது நியாயாதிக்க சபை அல்லது குற்றத்தால் பலியானவர்களின் உரிமைகள் மற்றும் உரித்துக்கள் செயல்முறைகள் பற்றிய விஷேட நடைமுறைகள் மற்றும் இனங்காணப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் சட்டப் பிரமாணக்குறிப்புகள் முதலியவற்றை பிரயோகித்தல் மற்றும் அவதானிப்புகளை விளம்பரப்படுத்தல் மற்றும் உறுதிசெய்தல்
  • குற்றங்களை குறைக்கும் விதத்தில்
  • குற்றத்தால் பலியானவர்களுக்கு நிகழும் தாக்கங்களை குறைக்கும் விதத்தில்
  • குற்றத்தால் பலியானவர்களுக்கு நியாயமான பரிகாரத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய, இயல்புநிலைக்கு கொண்டுவரக்கூடிய, ஆலோசனை வழங்கக் கூடிய, நஷ்டஈடுகளை வழங்கக் கூடிய மற்றும் அவர்களை பாதுகாக்கக் கூடிய விதத்தில்
  • நீதிமன்றத்தின்,ஏதாவது ஒரு விசாரணை ஆணைக்குழுவின் அல்லது வேறு ஒரு நீதிமன்றத்தின் முன்னிலையில் அச்சமின்றி சாட்சியமளிப்பதற்கு அல்லது சட்டத்தை அமுலாக்கும் ஒரு அதிகார சபையின் முன்னிலையில் உறுதிமொழியை வழங்க சாட்சியாளர்களுக்கு ஒரு நட்புநேய சூழலை எற்படுத்தக் கூடிய விதத்தில்
  • குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் பாதுகாப்பையும் உதவியையும் வழங்கக் கூடிய வகையில்
  • ஆராய்ச்சிகளை நடத்துவதை விளம்பரப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
  • பொருத்தமான அரசாங்கங்களுக்கு - மாத்திரம் சிபாரிசு செய்யலாம்

எமது பதவியணியினர்

திரு இந்திக்க சிறிவர்த்தன

பணிப்பாளர் (கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் பிரிவு)

0112866460
policy.dir@napvcw.gov.lk