FAQ
அடிக்கடி கேள்விப்படும் பிரச்சினைகள்
அதிகார சபையின் ஒட்டுமொத்த பொறுப்புக்களும் கடமைகளும் குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் உரிய 2015 இன் 04 ஆம் இலக்க சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளையும் உரித்துக்களையும் இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதும் மற்றும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும், அந்த உரிமைகள் அல்லது உரித்துக்கள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் அத்தகைய மீறுகை பற்றி விசாரணை செய்து பொருத்தமான பரிகார நடவடிக்கைகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய நிறுவனங்களை கேட்டுக்கொள்வதும், குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் தேவையான உதவியையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுப்பதும், அவர்களின் உரிமைகளும் உரித்துக்களும் பற்றி பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் விழிப்பூட்டி அறியப்படுத்துவதும், குற்றங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை இனங்கண்டுகொள்ளும் பொருட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் மற்றும் குற்றத்தால் பாதிக்ககப்படுபவர்களுக்கு நியாாயத்தை பெற்றுக்கொடுக்கும் செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழலை நிர்மாணிக்க தேவையான கொள்கைகள் பற்றிய சிபாரிசுகளை முன்வைப்பதும் அதிகார சபையின் பொறுப்புக்களிலும் கடமைகளிலும் உள்ளடங்குகின்றன.
இது பற்றிய ஒட்டுமொத்த வரைவிலக்கணமும் குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் உரிய 2015 இன் 04 ஆம் இலக்க சட்டத்தின் 46 ஆம் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக பார்க்கும் போது குற்றத்தால் பலியான ஒருவர் என்பது ஏதாவதொரு சட்டத்தின் மூலம் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள குறித்தவொரு குற்றம் புரியப்படுவதன் அல்லது ஏதாவது செயல் செய்யப்படுவதன் அல்லது செய்யாமல் விடப்படுவதன் விளைவாக அல்லது அரசியலமைப்பின் 11 ஆம் உறுப்புரையினால் அல்லது 13 ஆம் உறுப்புரையின் (1) அல்லது (2) ஆம் பிரிவுகளினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள ஒரு அடிப்படை உரிமை அல்லது ஒரு மனித உரிமை மீறப்படுவதால் உடலியல், உளவியல், சிந்தனை, பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள அல்லது வேறு ஏதாவதொரு பாதிப்புக்கு, துன்புறுத்தலுக்கு, நட்டத்திற்கு, பலவீனத்திற்கு அல்லது இழப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள எவரேனுமொருவர், அவரின் குடும்ப அங்கத்தவர் ஒருவர், பிள்ளை ஒருவர் அல்லது அவருடன் விஷேட உறவைக்கொண்டுள்ள எவரேனும் நபர் ஒருவர் என பொருள்படும்.
சட்டத்தை அமுலாக்கும் அதிகாரி ஒருவருக்கு ஒரு தகவலை வழங்கியமையால் அல்லது ஒரு முறைப்பாட்டை செய்தமையால் அந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள அல்லது முன்னெடுக்கப்படும் ஒரு விசாரணையின் போது அல்லது ஒரு புலன்விசாரணையின் போது அல்லது ஏதாவதொரு உரிமை அல்லது ஒரு மனித உரிமை மீறப்பட்டுள்ளமை சம்பந்தமாக ஆரம்பிக்கக்கூடிய அல்லது ஆரம்பிக்கப்பட்டுள்ள அல்லது ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு விசாரணையின் போது,
இதனுடன் தொடர்புடைய முழுமையான விபரங்கள் குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் உரிய 2015 இன் 04 ஆம் இலக்க சட்டத்தின் 3,4,5,6 ஆம் பிரிவுகளில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ளன. குற்றத்தால் பலியான ஒருவர் தொடர்பாக பொதுவாக பார்க்கும் போது,
අகுற்றத்தால் பலியான ஒருவரின் அல்லது சாட்சியாளர் ஒருவரின் உரிமைகள் மீறப்பட்டமை பற்றிய விசாரணையை மேற்கொள்ளச்செய்தல்;
குற்றத்தால் பலியான ஒருவருக்கு அல்லது சாட்சியாளர் ஒருவருக்கு பாதுகாப்பையும் உதவியையும் பெற்றுக்கொள்ளல்;
குற்றம் புரியப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள ஏதாவதொரு உடலியல் அல்லது உளவியல் அல்லது பொருளியல் பாதிப்புக்கு ஏதாவது தேவையான ஒரு உதவியை அல்லது நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு.
குற்றத்தால் பலியான ஒருவர், அதிகார சபைக்கு சமர்ப்பிக்கும் முகமாக ஒரு குற்றப் பாதிப்பு கூற்றை (Victim Impact Statement) தயாரித்துக்கொள்ள தேவையான அறிவுரைகளை பெற்றுக்கொள்ளல்.